Skip to content

அதிராம்பட்டினம் கோவில் விழா-தொட்டில் காவடியுடன் வந்து நேர்த்திக்டன்

  • by Authour

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் முத்தம்மாள் தெரு முத்தம்மாள் காளியம்மன் கோவிலில் மாசி மக திருவிழா  வெகு விமரிசையாக நடந்தது. இந்த ஆண்டு 50 ஆண்டு  திருவிழா விமரிசையாக  கொண்டாடப்பட்டது . சிலா காவடி,  பால் காவடி, தீச்சட்டி  எடுத்து வந்து  பக்தர்கள் நேர்த்திக்கடன்  செலுத்தினர்.

அம்மனை வேண்டி குழந்தை பாக்கியம்   பெற்ற தம்பதியர்,  தங்கள் குழந்தையை   கரும்பில் தொட்டில் கட்டி குழந்தையை  அந்த  கரும்பு தொட்டிலில் போட்டு  கோவிலுக்கு ஊர்வலமாக வந்து வேண்டுதலை நிறைவேற்றினர். இதில் ஏராளமான பக்தர்கள்  பங்கேற்றனர். அதைத்தொடர்ந்து  ஆலயத்தில் அன்னதானம் நடந்தது.

error: Content is protected !!