பொருளாதார மந்த நிலையின் காரணமாக ட்விட்டர் மற்றும் மெட்டா ஆகிய முக்கியமான டெக் நிறுவனங்கள் உலகம் முழுவதும் இருக்கும் தனது பணியாளர்களை வேலையை விட்டு நீக்கி வருகின்றன. பொருளாதார நெருக்கடி, குறைந்த விற்பனை மற்றும் இலக்கை அடைவதில் தொய்வு ஆகிய காரணங்களினால் இதனை செய்துள்ளதாக தெரிகிறது. அந்த வகையில் டெல் டெக்னாலஜிஸ் பெர்சனல் கம்ப்யூட்டர் தேவை குறைந்து வருவதால், சுமார் 6,650 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது உலக அளவில் உள்ள அதன் பணியாளர்களில் 5% ஆகும்.