அரியலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட், திருச்சி மண்டலம் சார்பில் 12 மகளிர் விடியல் பயண புதிய BS-VI நகரப் பேருந்துகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று (13.03.2025) கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிகள் மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா , ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழகம் சார்பில், பொதுமக்கள், மகளிர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், மாணாக்கர்கள்
உள்ளிட்டோர்களுக்கு அரசு பேருந்து சேவை செயல்பட்டு வருகிறது. அதன்தொடர்ச்சியாக இன்றையதினம், அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் 04 மகளிர் விடியல் பயண புதிய BS-VI நகரப் பேருந்துகளையும், அரியலூர் நகராட்சி பேருந்து நிலையத்தில் 08 மகளிர் விடியல் பயண புதிய BS-VI நகரப் புதிய பேருந்துகளையும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்ப) லிட், திருச்சி மண்டலம், ஜெயங்கொண்டம் கிளை சார்பில் பேருந்து எண்.TN 45 N 4619 தடம் எண்.009A, ஜெயங்கொண்டம் – அணைக்கரை உதயநத்தம் வழியாகவும், பேருந்து எண்.TN 45 N 4578 தடம் எண்.003B, ஜெயங்கொண்டம் – சுத்தமல்லி, தா.பழூர் வழியாகவும், பேருந்து எண்.TN 45 N 4564 தடம் எண்.005A, ஜெயங்கொண்டம் – காடுவெட்டி, ஆண்டிமடம் வழியாகவும், பேருந்து எண்.TN 45 N 4594 தடம் எண்.018A, ஜெயங்கொண்டம் – ஆர்.எஸ் மாத்தூர், செந்துறை வழியாகவும் 04 மகளிர் விடியல் பயண புதிய BS-VI நகரப் பேருந்துகள் பொதுமக்கள், மாணவிகள், குடும்பத்தலைவிகள், வேலை நிமித்தமாக பயணம் மேற்கொள்ளும் பெண்கள் ஆகியோர் பயன்பெறும் வகையில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
அரியலூர் நகராட்சி பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்ப) லிட், திருச்சி மண்டலம், அரியலூர் மற்றும் குன்னம் கிளைகளின் சார்பில் பேருந்து எண்.TN 45 N 4579 தடம் எண்.001A, அரியலூர் – ஓரியூர், சுண்டக்குடி வழியாகவும், பேருந்து எண்.TN 45 N 4631 தடம் எண்.003A, அரியலூர் – முட்டுவாஞ்சேரி, வி.கைகாட்டி வழியாகவும், பேருந்து எண்.TN 45 N 4642 தடம் எண்.003B, அரியலூர் – முட்டுவாஞ்சேரி, வி.கைகாட்டி வழியாகவும், பேருந்து எண்.TN 45 N 4615 தடம் எண்.005A அரியலூர் – வைப்பூர், பெரிய திருக்கோணம் வழியாகவும், பேருந்து எண்.TN 45 N 4559 தடம் எண்.006A அரியலூர் – கோட்டியால், சுத்தமல்லி வழியாகவும், பேருந்து எண்.TN 45 N 4575 தடம் எண்.008A அரியலூர் – கொட்டரை, தொண்டபாடி வழியாகவும், பேருந்து எண்.TN 45 N 4557 தடம் எண்.013A அரியலூர் – ஆர்.எஸ்.மாத்தூர், செந்துறை வழியாகவும், பேருந்து எண்.TN 45 N 4628 தடம் எண்.014A அரியலூர் – இரும்புலிக்குறிச்சி, செந்துறை வழியாகவும் 08 மகளிர் விடியல் பயண புதிய BS-VI நகரப் பேருந்துகள் மகளிர் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கரால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) நிர்வாக இயக்குநர் இரா.பொன்முடி, திருச்சி மண்டல பொது மேலாளர் ஆ.முத்துகிருஷ்ணன், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, அரியலூர் நகர்மன்ற தலைவர் சாந்தி கலைவாணன், ஜெயங்கொண்டம் நகர்மன்ற தலைவர் சுமதி சிவக்குமார், கோட்ட மேலாளர் பெரம்பலூர் புகழேந்திராஜ், அரியலூர் கிளை மேலாளர் குணசேகரன், ஜெயங்கொண்டம் கிளை மேலாளர் ராஜா, அரியலூர் நகர்மன்ற துணைத்தலைவர் கலியமூர்த்தி, ஜெயங்கொண்டம் நகர்மன்ற துணைத்தலைவர் கருணாநிதி, அரியலூர் வட்டாட்சியர் முத்துலெட்சுமி. ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் சம்பத்குமார், தொழிற்சங்க பிரதிநிதிகள், ஓட்டுநர்கள், நடத்துநர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.