Skip to content

கோவையில் எஸ்எஸ்ஐ போலீஸ் தூக்கிட்டு தற்கொலை….

கோவை மாவட்டம் வ.உ.சி. மைதானத்தில்  சொக்கலிங்கம் (54) என்பவர் காவல் சிறப்பு உதவி ஆய்வாளராக  பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வ.உ.சி. மைதானத்தில் உள்ள புங்கை மரத்தில் சேலையில் தூக்குப்போட்டு சொக்கலிங்கம் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பந்தைய சாலை போலீசார் தூக்கில் தொங்கிய சொக்கலிங்கத்தின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணிச்சுமை காரணமா? குடும்ப பிர்ச்சனையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!