சமூக வலைதளங்களில் தமிழக அரசின் மீதும் மாண்புமிகு முதல்வர் மற்றும் துணை முதல்வர் மீது அவதூறு பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக தகவல் தொழில் நுட்ப அணி சார்பில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர். அவற்றில் கூறியிருப்பதாவது. முகநூலில் (Tiruchirappalli திருச்சிராப்பள்ளி மற்றும் ஷேக்தாவூத் திருச்சிராப்பள்ளி) ஆகிய இரண்டு ID-களை சேர்ந்த நபர்கள் தொடர்ந்து முகநூலில் தமிழக அரசிற்கு எதிராகவும் மாண்புமிகு முதல்வர் மற்றும் துணை முதல்வர் மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருகின்றனர். இவர்கள் மீது உரிய சட்டநடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன் என்று இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் குறித்து அவதூறு…. திருச்சியில் எஸ்பியிடம் புகார் மனு….
- by Authour
