பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் 9 பெட்டிகளில் சுமார் 400 பயணிகளுடன் ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் குவெட்டாவில் இருந்து கைபர் பக்துன்க்வாவில் உள்ள பெஷாவருக்கு சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் போலன் மாவட்டத்தின் முஷ்காப் பகுதியில் ரயில் மீது பாகிஸ்தானிடமிருந்து பலூசிஸ்தானுக்கு சுதந்திரம் கோரும் பலூச் விடுதலை ராணுவம் என்ற கிளர்ச்சிப்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.
கடந்த 15 மணிநேரத்திற்கும் கூடுதலாக அவர்கள் எங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் உள்ளனர். இந்த நடவடிக்கையின்போது, கூடுதலாக 8 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது” என தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 13 பலுச் அமைப்பினர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட சுமார் 80 பயணிகளை பாதுகாப்புப் படையினர் மீட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இதுவரை 155 பேரை பாதுகாப்புப் படை மீட்டது. பிணைக் கைதிகளாக பிடித்த பலுசிஸ்தான் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த 27 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். மேலும் பிணைக் கைதிகளாக உள்ள 200க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது. ஆனால் பிணைக் கைதிகளை சுற்றி தற்கொலைப் படையினர் இருப்பதால் மீட்புப் பணி தாமதம் ஏற்பட்டுள்ளது.