Skip to content

கரூரில் டூவீலரில் பஸ் மோதி மருமகள் கண்முன்னே மாமியார் உடல் நசுங்கி பலி….

கரூர் மாவட்டம் நெரூரை அடுத்த ஒத்தக்கடை கிராமத்தை சார்ந்த ஹேமாவதி (வயது 32), உடல்நலம் சரியில்லாத மாமியார் காந்தாலட்சுமியை (65) இரு சக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

வெங்கமேடு மேம்பாலத்திலிருந்து கீழே சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த தனியார் நகர பேருந்தின் பக்கவாட்டில், இரு சக்கர வாகனத்தின் கண்ணாடி மோதியதாக சொல்லப்படுகிறது. அப்போது இருவரும் நிலை தடுமாறி சாலையில் விழுந்துள்ளனர்.

அப்போது, தனியார் பேருந்தின் பின்பக்க சக்கரம் காந்தலட்சுமி மீது ஏறியதில், அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். சிறு காயமடைந்த மருமகள் ஹேமாவதி உயிர் தப்பினார்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கரூர் நகர காவல் நிலைய போலீசார் மூதாட்டியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

error: Content is protected !!