Skip to content

சேறும் சகதியுமாக மாறிய புதுகை தற்காலிக பஸ் நிலையம்

  • by Authour

புதுக்கோட்டையில் புதிய பஸ்நிலையம்புதிதாககட்டுவதற்கான டெண்டர் விடப்பட்டதைத் தொடர்ந்து  பஸ் நிலையத்தின் ஒருபகுதி இடிக்கப்பட்டு பணிகள்  நடந்து வருகிறது.  இதனால திருச்சி செல்லும் பஸ்கள்
புதிய பஸ்நிலையம் பின்புறம் உள்ள அரசு போக்குவரத்து கழக
பனிமனையின்  ஒருபகுதி யை ஒதுக்கி திருச்சி செல்லும் பஸ்கள் அந்தப்பகுதியில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து திருச்சி பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த  நிலையில்புதுக்கோட்டையில் நேற்றும், இன்றும்  பெய்த மழையில்
அந்தப்பகுதிமுழுவதும் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக
காட்சி அளிக்கிறது.
சக்தியில்  நடந்து சென்று தான் பயணிகள் திருச்சி பஸ்சில் ஏறவேண்டிய நிலை உள்ளது.  இதனால்  மக்களின் உடைகள்  சேறாகி விடுகிறது.

எனவே  மாநகராட்சி நிர்வாகம், சேற்றில் மணல் கொட்டி மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என  பயணிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

பயணிகளின்  கோரிக்கைக்கு மாநகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்   மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

 

error: Content is protected !!