சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்தவர் வேலா(36). கூலித்தொழிலாளியான இவர் குடிபோதையில் சுற்றித்திரிந்தார். மதியம் 2 மணியளவில் திடீரென எழுப்பூர் பகுதியில் செல்லக்கூடிய கூவம் ஆற்றில் குதித்து நீச்சல் அடிக்க தொடங்கினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் போலீசாருக்கும், தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடம்வந்த அவர்கள் கூவம் ஆற்றில் நீச்சல் அடிக்கும் வேலாவை மீட்க முயன்றனர். ஆனால் அவர் தொடர்ந்து நீச்சல் அடித்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் கடந்து சிந்தாதிரிப்பேட்டை வந்தார். கூவம் ஆற்றின் பல பகுதிகளில் சேறு அதிகமாக இருப்பதால் படகு மூலம் மீட்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. இப்படியாக சுமார் 3 மணி நேரமாக கூவம் ஆற்றில் அங்கும் இன்றும் சுற்றித்திரிந்த போதை ஆசாமி வேலாவை மீட்க போலீசாரும் தீயணைப்பு படையினரும் படாதபாடு பட்டனர்.