தென் திருப்பதி என்று அழைக்கப்படும் தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் மாசி மாத திருத்தேர் மற்றும் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனத்தில் திருவீதி உலா காட்சி தருகிறார்.
இந்த நிலையில் இன்று சுவாமி யானை வாகன திருவீதி உலா ஆலய மண்டபத்தில் இருந்து புறப்பட்டது மேள தாளங்கள் முழங்க
சுவாமியின் திருவீதி உலா முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் வந்தது . ஆலயம் குடிபுகுந்த சுவாமிக்கு ஆலயத்தின் பட்டாச்சாரியார் மகா தீபாராதனை காட்டி கூடியிருந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார்.
கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற யானை வாகன திருவீதி விழாவை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் வழியிலும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.