தமிழகத்திலிருந்தும் மற்ற பகுதிகளிலிருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான போதை பொருட்கள் கடத்துவது வாடிக்கையாகி வருகிறது. அதன் தொடர்ச்சியாக வெளி மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டு வழியாக கேரளாவுக்கு போதை பொருட்கள் கடத்துவது தொடர்ந்து கொண்டிருக்கிறது அதன் தொடர்ச்சியாக பொள்ளாச்சி அடுத்த மீனாட்சிபுரம் சோதனை சாவடி அருகே சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த வாகனத்தை சோதனை செய்த போலீசார் அதனுள் தடை செய்யப்பட்டுள்ள குட்கா புகையிலை சுமார் 1250 கிலோ பிடிபட்டது இதனை அடுத்து வாகனத்தை பறிமுதல் செய்து ஆனைமலை காவல் நிலையத்தில் வைத்து சோதனை செய்து உள்ளார்கள் மேலும் அந்த வாகனத்தை ஓட்டி வந்த திருச்சூரைச் சேர்ந்த ஓட்டுநர் முகமது கபில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .மேலும் இரண்டு நபர்கள் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது அவர்களையும் ஆனைமலை போலீசார் தேடி வருகின்றனர் இந்த பொருள் கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு கடத்தப்படுகின்றதாக தெரிய வந்தது என காவல்துறையினர் தெரிவித்தனர் .
பொள்ளாச்சி அருகே கேரளாவிற்கு கடத்த முயன்ற 1250 கிலோ குட்கா பறிமுதல்…
- by Authour
