Skip to content

பாகிஸ்தானில் பயணிகள் ரயில் கடத்தல், ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை- தீவிரவாதிகள் அட்டூழியம்

  • by Authour

அப்போது பலுச் விடுதலை படையை (BLA) சேர்ந்தவர்கள், ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயிலை சிறைபிடித்தனர். ரயிலின் குறிப்பிட்ட பெட்டிகளில் பாகிஸ்தான் பாதுகாப்பு படை வீரர்கள் பயணம் செய்தனர். அவர்களுக்கும் கிளர்ச்சிப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில் 30 பாகிஸ்தான் வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 500-க்கும் மேற்பட்ட பயணிகள், பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.

இதுவரை 104 பயணிகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் எத்தனை பயணிகள் ரயிலில் பிணைக் கைதிகளாக இருக்கின்றனர் என்ற சரியான தகவல் தெரியவில்லை. ஏனெனில் ரயிலில் இருந்து சில பயணிகள் இறங்கி இருள் என்று கூட பார்க்காமல் மலைகளுக்கு இடையே ஒளிந்தனர் என்று சொல்லப்படுகிறது. அதேபோல் 35 பயணிகளை தீவிரவாதிகள் ரயிலில் இருந்து கடத்திச் சென்றதாகவும், ஆனால் அவர்கள் உயிருடன் இருப்பதாகவும் உள்ளூர் காவல்துறை தெரிவித்துள்ளது.

தீவிரவாதிகளை வீழ்த்தும் பணி தொடர்ந்து நடக்கிறது.  அனைத்து பிணைக் கைதிகளும் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என்று ராணுவம் தெரிவித்துள்ளது. மீட்கப்பட்ட பயணிகளில் 58 பேர் ஆண்கள், 31 பேர் பெண்கள், 15 பேர் குழந்தைகளாவர். அவர்கள் அனைவரும் இன்னொரு ரயில் மூலம் பாலோசிஸ்தான் மாகாணத்தின் கச்சி மாவட்டத்தில் உள்ள மாக் நகருக்கு பத்திரமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானில் பயணிகள் ரயிலை தீவிரவாதிகள்  சிறைபிடித்து ராணுவத்தினரை சுட்டுக்கொன்ற சம்பவம் உலகையே  பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.  இன்று காலை கிடைத்த தகவலின்படி தொடர்ந்து  துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.  பெரும்பாலான தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

.

 

error: Content is protected !!