Skip to content

ஹெலிகாப்டர் விபத்து….விமானி உட்பட 3 பேர் பலி..!

அமெரிக்காவில் உள்ள மிசிசிபி (Mississippi) மருத்துவமனையில் நோயாளிகளுக்கு என ஹெலிகாப்டர் சேவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாட்செஸ் டிரேஸ் பார்க்வே என்ற காட்டுப்பகுதியில், நேற்று (மார்ச் 10) மதியம் 1.15 மணியளவில் ஹெலிகாப்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில், விமானி, 2 மருத்துவ ஊழியர்கள் என மொத்தம் 3 பேர் பயணம் செய்தனர்.ஜார்சனில் இருந்து செயிண்ட் டோமினிக் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டது.  ஹெலிகாப்டர் புறப்பட்ட 27 நிமிடங்களில் விபத்தில் சிக்கியது. ஹெலிகாப்டர் விபத்தை மருத்துவமனை நிர்வாகம் உறுதிப்படுத்திய பிறகு, அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கபட்டது. விபத்துக்கான காரணம் என்ன என்பது பற்றிய விவரங்கள் தெரியவரவில்லை. இந்த விபத்தில் 3 பேரும் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

error: Content is protected !!