விளம்பர பேனர் வைப்பதில் தகராறு.. தந்தை- மகன் மீது தாக்குதல்
மதுரை மீனம்மாள்புரம் முனியாண்டி கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் குருசாமி. இவரது மகன் கார்த்திகேயன்( வயது 24) இவர் விளம்பர பேனர் நிறுவனம் நடத்தி வருகிறார் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கார்த்திகேயன் தனது தந்தையுடன் திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் ஒரு எலக்ட்ரிக்கல் கடையின் விளம்பர பேனரை வைத்தனர் அப்போது
அதே பகுதியைச் சேர்ந்த விஜய் ,ஹரி, நவீன் குமார்( 25 )பிரசாந்த் (23) ஆகிய 4 பேரும் சேர்ந்து மர மரக்கட்டை மற்றும் க்
கல்லால் தந்தை மகன் இரண்டு பேரையும் தாக்கினர் இதில் குருசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் இது குறித்து கார்த்திகேயன் கொடுத்த புகாரின் அடிப்படையில் நவீன் குமார் ,பிரசாந்த் ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர் மேலும் தலைமறைவான விஜய், ஹரி ஆகிய இரண்டு பேரை தேடி வருகின்றனர்.
தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
திருச்சி பாபு ரோடு சௌந்தரபாண்டியன் பிள்ளை தெரு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 42) இவர் கடந்த 8ம் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு கும்பகோணத்தில் உள்ள தனது உறவினர் இல்ல விசேஷத்திற்கு சென்றார் பின்னர் இரண்டு நாட்கள் கழித்து வீடு திரும்பினார் அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் வைத்திருந்த 12 கிராம் எடை கொண்ட தாலி குண்டு ,70 கிராம் வெள்ளி ஆபரணங்கள், ரூ 6500 ரொக்கப்பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது இது குறித்து ஆறுமுகம் கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார் சப் இன்ஸ்பெக்டர் ராஜராஜேஸ்வரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கத்தி முனையில் வியாபாரியை மிரட்டிய 3பேர் கைது
அரியலூர் ஒட்ட கோவில் காலனி தெரு பகுதியைச் சேர்ந்தவர் கவியரசு (வயது 21) இவர் திருச்சி சஞ்சீவி நகர் மெயின் ரோடு பகுதியில் ஜூஸ் கடை வைத்து நடத்தி வருகிறார் இவர் வழக்கம் போல் கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டார் அப்போது மூன்று வாலிபர்கள்
ஆளுக்கு ஒரு ஜூஸ் குடித்துவிட்டு பணம் கொடுக்காமல் திரும்பிச் சென்றனர் அப்போது கவியரசு அவர்களிடம் ஜூஸ் குடித்ததற்கான பணத்தை கேட்டார்.
இதில் வியாபாரிக்கும் அந்த வாலிபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்கள் க கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் ரூபாய் 2000 பணத்தை பறிக்க முயன்றனர் இதுகுறித்து கவியரசு உடனடியாக கோட்டை போலீசில் புகார் செய்தார் போலீசார் விரைந்து வந்து அந்த மூன்று பேரையும் கைது செய்தனர் விசாரணையில் கைதானவர்கள் திருச்சி பூசாரி தெரு முனிசிபல் காலனி பகுதியைச் சேர்ந்த மணிமாறன் ( 29 )திருச்சி ஓடத்துறை காவேரி பாலம் பகுதியைச் சேர்ந்த விஜய் (27 )திருச்சி திருவானைக்காவல் தண்ணீர் தொட்டி முகில் தோப்பு பகுதியைச் சேர்ந்த (சஞ்சய் 23) என்பது தெரிய வந்தது.