கரூரில் பட்டப்பகலில் ஆம்னி வேனில் கடத்தப்பட்ட கல்லூரி மாணவி நேற்று நள்ளிரவு தனிப்படை குழுவினரால் மீட்பு – மாணவியை ஒருதலையாக காதலித்து வந்த நந்தகோபால், அவரின் தாய்,பாட்டி உள்ளிட்ட ஐந்து பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கரூர் தான்தோன்றி மலை அரசு கலைக் கல்லூரியில் படித்து வரும் ஈசநத்தம் பகுதியில் சேர்ந்த மாணவி நேற்று பிற்பகல் 12:30 மணியளவில் பொன் நகர் பகுதியில் பேருந்தில் இருந்து இறங்கி கல்லூரிக்கு சக மாணவிகளுடன் நடந்து சென்று கொண்டிருந்த போது ஆம்னி வேனில் பட்டப் பகலில் கடத்தப்பட்டார்.
கடத்தப்பட்ட மாணவியை மீட்க மூன்று தனிப்படை குழுவினர் தீவிரமாக தேடி வந்த நிலையில், நேற்று நள்ளிரவு திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டில் மாணவி மீட்கப்பட்டு மாணவியை ஒருதலையாக காதலித்து வந்த நந்தகோபால், அவரின் தாய் கலா, பாட்டி பொன்னம்மாள், சரவணன், பழனிச்சாமி உள்ளிட்ட ஐந்து நபர்களை போலீசார் கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய ஆம்னி வேலை பறிமுதல் செய்து
தான்தோன்றி மலை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரி மாணவி மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், ஐந்து பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூரில் பட்டப் பகலில் குடும்பத்துடன் ஒன்று சேர்ந்து இளைஞர், கல்லூரி மாணவியை கடத்தியது தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.