Skip to content

ரூ.25 கோடி நகைகள் கொள்ளை.. 2 பேரை சுட்டுப்பிடித்த போலீஸ்..

  • by Authour

பீகாரில் உள்ள அரா மாவட்டம் கோபாலி சவுக் கிளையில் உள்ள நகைக் கடையில் இன்று காலையில் ஊழியர்கள் தங்கள் வழக்கமான பணிகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு துப்பாக்கியுடன் திடீரென உள்ளே புகுந்த 6 பேர் கொண்ட கும்பல், கடையின் கதவை மூடிவிட்டனர். கடையில் இருந்த ஊழியர்களை துப்பாக்கி முனையில் சிறைவைத்து நகைகளை கொள்ளை அடித்தனர். அப்போது அந்த கும்பல் ஊழியர்களை தாக்கியதில் இருவருக்கு காயம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து நகைகளை கொள்ளை அடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் தப்பிச்செல்லும் போது அவர்களை விரட்டிச்சென்ற போலீசார் தற்காப்புக்காக சுட்டதில் 2 கொள்ளையர்கள் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போஜ்பூர் போலீசார் கூறியதாவது.. கொள்ளையடித்துச்சென்றவர்களில் இருவரை சுட்டுப்பிடித்து கைது செய்துள்ளோம். அவர்களிடமிருந்து திருடிய நகைகளை மீட்டுவிட்டோம். அந்த நகைகளின் மதிப்பு ரூ.25 கோடி. அவர்களிடமிருந்த 2 துப்பாக்கிகள் மற்றும் 10 தோட்டாக்கள், வாகனங்கள் பறிமுதல் செய்துள்ளோம். தப்பியோடிய 4 கொள்ளையர்களை தனிப்படை அமைத்து தேடி வருகிறோம் என்றனர்.

error: Content is protected !!