Skip to content

முதல்வரின் 72வது பிறந்த நாள் கொண்டாட்டம்… 572 பேருக்கு பிரியாணி விருந்து..

போரூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 572 பேருக்கு பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. சென்னை போரூரில் மதுரவாயல் தெற்குப் பகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி பிரசாந்த் ஏற்பாட்டில், வட்டச் செயலாளர் மோசஸ் முன்னிலையில் நடைபெற்ற

இந்நிகழ்ச்சியில் 572 பேருக்கு பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மதுரவாயல் எம்.எல்.ஏ காரம்பாக்கம் கணபதி, துப்புரவு பணியாளர்களுக்கு புதிய ஆடைகளை வழங்கியதுடன், பிரியாணி விருந்தையும் தனது கையால் தொடங்கி வைத்தார்.

error: Content is protected !!