Skip to content

கடன் கேட்ட பெண்ணிடம், கற்பை கேட்ட ஆசிரியர்- தஞ்சை போலீசில் புகார்

தஞ்சை நாஞ்சிக்கோட்டை பர்வின் திரையரங்கு பகுதி அருகே வசித்து வருபவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆரோக்கிய சாமி (70). இவர்  வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவர் பெரும்பாலும் பெண்களுக்கு மட்டுமே  வட்டிக்கு பணம் தருவதாக   கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் தஞ்சையை சேர்ந்த ஒரு டீக்கடை தொழிலாளியின் மனைவி  ஆரோக்கியசாமியிடம்  ரூ.15 ஆயிரம் கடனாக  போனில் கேட்டு உள்ளார்.  அதற்கு ஆரோக்கிய சாமி நான் பணம் தருகிறேன் அதற்கு நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் .எனக்கு மனைவி இல்லை. ஆதலால் என்னிடம் நீ உல்லாசமாக இருந்தால் போதும். நீ அந்த பணத்தை தர வேண்டாம் என கூறியதற்கு அந்த பெண் நான் வட்டிக்கு தான் பணம் கேட்டேன் அதற்காக நீங்கள் இப்படி அசிங்கமாக பேசலாமா என சொல்லி தொலைபேசியை துண்டித்து உள்ளார்.

பிறகு நான் உனது வீட்டிற்கு வருகிறேன் என மீண்டும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூறியுள்ளார் இதனால்
சுதாரித்துச் கொண்ட  டீக்கடை தொழிலாளியின்  மனைவி தனக்கு எதுவும் நேரலாம் என தனது தொலைபேசியில் ரெக்கார்டு செய்த படி தொலைபேசியை ஒரு இடத்தில் மறைவாக வைத்து அவர் பேசியதை பதிவு செய்துள்ளார். அதில் அவர் நாம் உல்லாசமாக இருக்கலாம், ஹேப்பியாக   சந்தோசமாக இருக்கலாம்,  நீ எனக்கு எந்த பணமும் தர வேண்டாம் வா, இதுல உனக்கு எந்த லாஸ்சும் இல்ல. என வலுக்கட்டாயமாக அந்த  பெண்ணை அணைத்து பலாத்காரம் செய்ய முயற்சி செய்கிறார்.

அந்த பெண்  ஆசிரியர் ஆரோக்கியசாமியின் பிடியில் இருந்து தப்பி விடுகிறார்.  தான் நினைத்து நடக்கவில்லை என்ற ஏமாற்றத்துடன், என்ன இப்படி ஏமாற்றிவிட்டீயே என   ஆரோக்கியசாமி வீட்டை விட்டு வெளியே செல்கிறார்.

இது போல் அவர் நிறைய பெண்களிடம் பணம் தருவதாக சொல்லி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது இவருக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார் .

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.  இந்த சம்பவம் குறித்து அந்தப் பெண் தஞ்சாவூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்

error: Content is protected !!