Skip to content

தமிழர்கள் அநாகரிகமானவர்கள் என்று மந்திரி பேசியதை பிரதமர் ஏற்கிறாரா? ஸ்டாலின் கேள்வி

  • by Authour

தமிகத்திற்கான கல்வி நிதியை வழங்க கோரி,  தென் சென்னை திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் மக்களவையில் இன்று பேசினார். இதற்கு பதிலளித்த  மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழர்கள் அநாகரிகமானவர்கள் என்றார்.

இதற்கு  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக முதல்வர் தனது  X  தளத்தில் கூறியிருப்பதாவது:

தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசம் ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு நாவடக்கம் வேண்டும்! தமிழ்நாட்டின் நிதியைத் தராமல் ஏமாற்றும் நீங்கள் தமிழ்நாட்டு எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா? தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்துகிறீர்கள். மாண்புமிகு பிரதமர் அவர்கள் இதனை ஏற்கிறாரா?

NEP, மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு அனுப்பிய PM SHRI MoU முற்றிலுமாக நிராகரித்து விட்டது என எனக்குக் கடிதம் எழுதியது நீங்கள் தானே? பிரதான் அவர்களே, நாங்கள் மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்துச் செயல்படுகிறோம்! உங்களைப் போல நாக்பூரின் சொற்களுக்குக் கட்டுப்பட்டு அல்ல!! நாங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவும் இல்லை, அப்படி முன்வராத என்னை யாரும் வற்புறுத்தவும் முடியாது. தமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய நிதியை, எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா முடியாதா என்பதற்கு மட்டும் பதில் கூறுங்கள்! என்று  அதில்  தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!