நடிகை அபிநயா தமிழ் சினிமாவில் சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான நாடோடிகள் படத்தின் மூலம் அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து இவர் ஈசன், ஆயிரத்தில் ஒருவன், வீரம், ஏழாம் அறிவு, தனி ஒருவன் என பல படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். அதேசமயம் இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிப் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அபிநயாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. மோதிரம் மாற்றிய பிறகு கைகளை மட்டும் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
இதற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை அபிநயா , நடிகர் விஷாலுடன் திருமண வதந்தி வந்த போது அதற்கு மறுப்பு தெரிவித்த அவர், 15 வருடங்களாக தன்னுடைய நண்பர் ஒருவரை காதலித்து வருவதாகவும் அவரை தான் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது