மக்களவையில் இன்று தென் சென்னை திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் , மத்திய அரசு தமிழகத்திற்கு கல்வி நிதியை தர மறுப்பது குறித்த பிரச்னையை எழுப்பினார். அப்போது கல்வி மந்திரி, தர்மேந்திர பிரதான் எழுந்து பதிலளித்தார். அப்போது அவர் தமிழக மக்கள் நாகரிகமற்றவர்கள் என கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினார்.
இதற்கு திமுக எம்.பிக்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். ஒட்டுமொத்தமாக எழுந்து அவையில் மந்திரியை முழக்கமிட்டனர். மத்திய மந்திரியின் இந்த ஆணவ பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். தர்மேந்திர பிரதான் மீது உரிமை மீறல் பிரச்னை கொண்டு வருவோம் என திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி அறிவித்தார். இந்த நிலையில், மந்திரி தர்மேந்திர பிரதான், எனது பேச்சு யாரையாவது புண்படுத்தி இருந்தால் , தமிழக மக்கள் நாகரிகமற்றவர்கள் என்ற வார்த்தையை திரும்ப பெறுவதாக கூறினார்.