Skip to content

திருச்சி அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி கடும் எச்சரிக்கை…

  • by Authour

அதிமுக காணொலி கலந்துரையாடல் கூட்டத்தில், திமுகவினருடன் தொடர்பில் உள்ள திருச்சி நிர்வாகிகளுக்கு கட்சியின்  பொதுச்செயலாளர் எச்சரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அதிமுக சார்பில், தமிழகத்தில் உள்ள கட்சி ரீதியான 82 மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள், பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் காணொலி கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

திருச்சி அதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் தென்னூர் ஷான்ஸ் ஓட்டல் அரங்கில் புறநகர் தெற்கு மாவட்ட அலுவலகத்தில்  வடக்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் மு. பரஞ்ஜோதி , மாவட்டச் செயலாளர் ப.குமார்  , மாநகர் மாவட்டச் செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.இதில்  திருச்சி மாவட்ட அனைத்து பிரிவு நிர்வாகிகளும் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சென்னையிலிருந்து காணொலி மூலம் பங்கேற்று கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.

அப்போது  திருச்சி மாநகர வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் உள்ளூர் அமைச்சர்களுக்கு தொடர்பில் இருப்பதாக புகார்கள் வருகின்றன.  இது தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி கடும் எச்சரிக்கை விடுத்தார்.

இதுகுறித்து கலந்தாய்வில் பங்கேற்ற கட்சி நிர்வாகிகள் சிலர் கூறுகையில்,
பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, சுணக்கமாக உள்ள, கட்சிக்குள் பிரச்னையிருக்கும் மாவட்ட நிர்வாகிகளை அழைத்துப் பேசினார். சிறப்பாக பணியாற்றிய மாவட்டங்களையும் நிர்வாகிகளையும் பாராட்டினார். திருச்சி மாவட்ட நிர்வாகிகளிடம் பேசும்போது, திருச்சி அதிமுக நிர்வாகிகள் சிலர் உள்ளூர் திமுக அமைச்சர்களுடன் தொடர்பில் இருப்பதாக புகார் வருகிறது. மறைந்த பொதுச்செயலாளர் ஜெயலலிதா இருந்தபோது, நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக தொடர் வெற்றிகளை பெற்று அதிமுகவின் கோட்டையாக திருச்சி இருந்தது. ஆனால் இன்று நிலை வேறாகிவிட்டது. அதிமுக ஆட்சி அமைய நாம் படுபட வேண்டும். அதை விடுத்து திமுகவினருடன் தொடர்பிலிருந்தால் நாம் எப்படி வெற்றி பெற முடியும் ? திமுக அமைச்சர்களுடன் தொடர்பிலிருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கட்சியிலிருந்தும் நீக்கப்படுவீர்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார் என்றார்.

error: Content is protected !!