Skip to content

தொடர்ந்து ஓபனராக விளையாடுவேன்- ரோகித் சர்மா பேட்டி

  • by Authour

சாம்பியன்ஸ் டிராபி போட்டி  முடிந்ததும் இந்திய  கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா, கோலி,  ஜடேஜா ஆகியோர் ஓய்வு அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக பரவலாக  ரசிகாகள் மத்தியில்  கருத்து நிலவியது.

இந்த நிலையில் நேற்று  துபாயில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில்,  இந்தியா  அமோகமாக வெற்றி பெற்றது. இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒரு போட்டியில் கூட இந்தியா  தோல்வி அடையாத நிலையில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றது.

நேற்று இறுதிப்போட்டியிலும் வென்று 3 வது முறையாக சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றது. அத்துடன்  பிளேயர் ஆப் த மேட்ச் ஆக  இந்திய கேப்டன் ரோகித் தேர்வு  செய்யப்பட்டார்.   வெற்றியை தொடர்ந்து  ரோகித் சர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது:

‘‘எனக்கு ஓய்வுபெறும் எண்ணம் கிடையாது. வதந்திகள் பரவிவிடக் கூடாது என்பதால், இதனை இப்போது தெளிவுப்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. எதிர்கால திட்டம் என்று எதுவும் கிடையாது. ஓபனராக தொடர்ந்து விளையாட விரும்புகிறேன்’’ எனத் தெரிவித்தார்.

error: Content is protected !!