கரூர் ஆத்தூர் அருள்மிகு ஸ்ரீ மஹா சோளியம்மன் அருள்மிகு ஸ்ரீ மஹா முத்து சுவாமி ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
கரூர் ஆத்தூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மஹா சோளியம்மன் அருள்மிகு ஸ்ரீ மஹா முத்து சுவாமி ஆலயம் புதியதாக அமைக்கப்பட்டு இன்று அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஆலயம் அருகே பிரத்யேகரமாக யாக குண்டங்கள் அமைத்து இந்தியா முழுவதும் இருந்து 140 முக்கிய
நதிகளில் கொண்டுவரப்பட்ட புனித தீர்த்தங்களை கொண்டு சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் கலசத்திற்கு தீபம் காண்பிக்கப்பட்ட பின்னர் கலசத்தினை தலையில் சுமந்தவாறு கோவிலை சுற்றி வலம் வந்த பிறகு கோபுர கலசத்தை வந்தடைந்தது பின்னர் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
கும்பாபிஷே விழாவில் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் தங்கவேல் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் கும்பாபிஷேக விழாவை காண உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாரக்கணக்கான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.