இசை அமைப்பாளர் இளையராஜா லண்டனில் சிம்பொனி அரங்கேற்றம் செய்தார். இன்று காலை அவர் சென்னை திரும்பினார். அவருக்கு தமிழக அர
சு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் இளையராஜா கூறியதாவது: அரங்கேற்றம் செய்யப்பட்ட சிம்பொனியை இசையை யாரும் டவுன்லோடு செய்து கேட்காதீர்கள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தால் இங்கும் சிம்பெனி அரங்கேற்றம் செய்வேன். லைவாக கேட்டால் தான் அதன் உன்னதம் புாியும். சென்னைதொடர்ந்து அக்டோர் 6ம் தேதி துபாயில் ஆரம்பித்து, செப்டம்பர் 6ல் பிரான்ஸ், மற்றும் ஜெர்மனி உள்பட 13 நாடுகளில் சிம்பொனி அரங்கேற்றம் நடக்க இருக்கிறது. எந்த விஷயத்திலும் நீங்கள் நினைக்கும் அளவுக்கு நான் இல்லை. அவரவர் துறையில் இளைஞர்கள் நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும். லண்டனில் சிம்பொனி வெற்றிகரமாக அரங்கேற்றம் செய்தது மகிழ்ச்சி. இது ஆரம்பம் தான். இசை கோர்ப்பாளர் நிக்கி தாமஸ் தலைமையில் 80 பேர் நிகழ்ச்சியை சிறப்பாக அமைத்து கொடுத்தனர். ஆரம்பம் முதலே அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மகிழ்ச்சியோடு நீங்கள் வழி அனுப்பி வைத்ததால் இறைவன் வெற்றியை தந்தான். தமிழ்நாட்டிற்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது இவ்வாறு இளையராஜா கூறினார். அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது: இளையராஜாவால் தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் பெருமை என்றார்.
