திருச்சி அரியமங்கலம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்க்கு லோடு ஆட்டோ தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பாட் மசாலா பொருட்கள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் அந்த அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சந்தேகம் படும்படியாக வந்த லோடு ஆட்டோவை மறித்து சோதனை செய்தபோது அதில் கூலில் மற்றும் கான்ஸ் உள்ளிட்ட பொருட்கள் இருப்பது தெரியவந்தது அதன் அடிப்படையில் அந்த வேனை பறிமுதல் செய்ததோடு டிரைவரிடம் விசாரணை செய்த போது ட அரியமங்கலம் நேருஜிநகரை சேர்ந்த கணேசன் மகன் சுரேஷ்குமார் (31) என்றும்அவர் எங்கிருந்து இதை ஏற்று வருகிறேன் ஏற்றி வந்த குடோனை காட்டி உள்ளார்.
அதன் அடிப்படையில் குடோன்குள் அதிரடியாக ரமேஷ் தலைமையிலான போலீசார் சோதனை செய்த போது குடோனுக்குள்ளிருந்து 260 கிலோ ஹான்ஸ், 27 கூலிப் , 130 கிலோ விமல் பாக்கு, 4 கிலோ பான்பராக் என மொத்தம் 421 கிலோ மறைத்து வைத்திருந்ததை பறிமுதல் செய்தனர்.
மேலும் இது சம்பந்தமாக இந்த குடோனில் மறைத்து வைத்திருந்த பொருட்களின் உரிமையாளரான லால்குடி அருகே உள்ள தாளக்குடியை சேர்ந்த இளையராஜா (40) என்பவரை தேடி வருகின்றனர்.
மேலும் போலீசார் பறிமுதல் செய்த குத்தா பன் மசாலாவின் மதிப்பு ஒரு லட்சத்து 62 ஆயிரம், லோடு வின் ரூ 6 லட்சம் மற்றும் செல்போன் ரூ 2000 ஆகும். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.