Skip to content

6 குழந்தை பெற்றுக்கொண்டாலும் 6 மாத மகப்பேறு விடுமுறை- முதல்வர் அறிவிப்பு

ஆந்திராவில் அரசு ஊழியர்களுக்கு ஐந்து ஆறு குழந்தைகளை பெற்றுக் கொண்டாலும் மகப்பேறு விடுமுறையுடன் கூடுதல் சலுகை வழங்கப்படும் என மகளிர் தின விழாவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு வெளியிடுள்ளார்.

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, இளம் இந்தியாவை இலக்காகக் கொண்டு, மக்கள் தொகை மேலாண்மை குறித்து சில  மாதங்களாக பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும் சமீபத்தில் இதற்கு ஏற்ப சில முக்கிய முடிவுகளை அறிவித்து வருகிறார். ஆந்திராவில் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட தகுதியற்றவர்கள் என்ற தேர்தல் விதியை நீக்கி, சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டன .

இந்த நிலையில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மார்க்கபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் சந்திரபாபு நாயுடு, பெண்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் அதிகாரமளிப்பை குறித்து பேசினார். மேலும் உலக நாடுகளில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பல நாடுகள் முதியோர்களின் எண்ணிக்கையால் அதிகரித்துள்ளது  இதே நிலை தொடர்ந்தால் அந்த நாடுகள் வருங்காலத்தில் ஆட்கள் இல்லாத நாடாக மாறும். எனவே  மக்கள் சதவீதம் மேலாண்மை   கட்டாயம் இருக்க வேண்டும். இதற்காக  அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுமுறை என ஆறு மாதம் விடுமுறை வழங்கப்படுகிறது. அது கூட இரண்டு குழந்தைகளுக்குள் இருந்தால் மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால் நான் இப்பொழுது அறிவிக்கிறேன் மூன்று அல்ல ஐந்து. ஆறு குழந்தைகளை பெற்றுக் கொண்டாலும் மகப்பேறு விடுமுறை ஆறு மாதம் வழங்குவதோடு கூடுதலாக அவர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும். மகளிர் சக்தி என்பது யாருக்கும் கிடைக்காத வரம். குழந்தை பிறப்பு மகளிர் இல்லாவிட்டால் சாத்தியமில்லை. நீங்கள் தான் உலகத்தை ஆளும் சக்தி குழந்தைகளை பெற்று கொண்டு வருங்காலத்தில் வியாபாரம் செய்து பணம் சம்பாதித்து சமூகத்தில் கௌரவத்துடன்  வாழ்வோம். அத்துடன் மக்கள் தொகை நிர்வாக சக்தியும் வேண்டும் என அவர் பேசினார்.

error: Content is protected !!