Skip to content

எதிர்கட்சி மாநிலங்களுக்கு செல்லும் பிரதிநிதிகள்.. திமுக எம்பிக்கள் கூட்டத்தில் முடிவு

  • by Authour

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன், திமுக எம்.பி.க்கள் டிஆர் பாலு, கனிமொழி உள்ளிட்ட எம்பிக்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடர், பிற மாநிலங்களை ஒருங்கிணைத்து நிதிப்பகிர்வு, இந்தி திணிப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.  பின்னர் அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டபடி அமைக்கப்படவுள்ள கூட்டு நடவடிக்கை குழுவுக்கு பிற மாநில கட்சிகளை நேரில் சென்று அழைக்க அமைச்சர்கள், எம்பிக்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதன்படி கேரளாவுக்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன், ஆந்திராவுக்கு அமைச்சர் எ.வ.வேலு, மேற்கு வங்கத்திற்கு கனிமொழி , ஒடிசா மாநிலத்திற்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செல்வது என தீர்மானிக்கப்பட்டது.  தொகுதி மறுவரையறை என்பது தனிப்பட்ட ஒரு கட்சியின் பிரச்சனை இல்லை. தமிழ்நாட்டின் பிரச்சனை. பல மாநிலங்களின் பிரச்சனை. எனவே திமுக எம்பிக்கள் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி எம்பிக்களையும் ஒருங்கிணைத்து முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்ததாக கூறப்படுகிறது. இக்கூட்டத்தில்

நிதிப்பகிர்வு, மும்மொழிக்கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு விவகாரங்களில் முதலமைச்சரின் அனைத்து முயற்சிகளிலும் முழுமையாக துணை நின்று, நாடாளுமன்றத்திலும் இவற்றை முன்வைத்து போராடி வெற்றியை ஈட்டுவது. மறுசீரமைப்பினால் தொகுதிகளை இழக்கும் மற்ற மாநிலங்களையும் ஒருங்கிணைத்து களம் காணுவது. தொகுதி மறுசீரமைப்பில் மாநிலங்களுக்கான உரிமைகளை நிலைநாட்டும் வகையில் நாடாளுமன்றத்தில் இதனைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து பாதிப்படையவுள்ள மாநிலங்களுடைய தொகுதிகளின் எண்ணிக்கையையும் அதன் விகிதாசாரத்தையும் காப்பாற்ற முயற்சி மேற்கொள்வது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

error: Content is protected !!