Skip to content

இந்தியா வெற்றி பெற்றால்.. ரசிகர்களுக்கு “ஷாக் செய்தி” இருக்கு

  • by Authour

ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் நடத்துகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடக்கின்றன. லீக் சுற்றோடு பாகிஸ்தான் வெளியேறியது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா போன்ற அணிகளும் அரையிறுதியுடன் வெளியேற இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடக்கும் பைனலில் இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. சாம்பியன்ஸ் டிராபி பைனலில் இரு அணிகளும் 25 ஆண்டுகளுக்கு பின் மோத உள்ளன. 2000ல் நியூசிலாந்து கோப்பை கைப்பற்றியது. இதற்கு இந்தியா இன்று பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்பியன்ஸ் டிராபியை பொருத்தவரை இந்திய அணி அசுர பலத்தில் உள்ளது. ஓபனிங் இறங்கும் கேப்டன் ரோகித் சர்மா 15  ஓவர்கள் விளையாடினால் போதும் இந்தியா எத்தகைய இமாலய ஸ்கோரையும் எட்டும். வங்கதேசத்திற்கு எதிராக சதம் விளாசிய துணை கேப்டன் சுப்மன் கில் நம்பிக்கை தருகிறார். கோலி நல்ல பார்மில் இருக்கிறார். ஸ்ரேயாஸ், ஹர்திக் பாண்ட்யா, ராகுல், ரவிந்திர ஜடேஜா என வலுமான பேட்டிங் ஆர்டர் இந்தியாவிற்கு மிகப்பெரிய பலம்.  வேகப்பந்துவீச்சில் ஷமி மிரட்டி வருகிறார்.  குல்தீப் யாதவை நீக்கி, அர்ஷ்தீப் சேர்க்கப்படலாம். இம்முறை நியூசிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் நமது ‘ஸ்பின்னர்’கள் அசத்தினர். ‘சுழல் மாயாவி’ வருண் சக்ரவர்த்தி (5 விக்.,), ஜடேஜா (1), அக்சர் படேல் (1), குல்தீப் (2) சேர்ந்து 9 விக்கெட் வீழ்த்தினர். 37.3 ஓவரில் 125 ‘டாட் பால்’ வீசி, நியூசிலாந்தை வீழ்த்தினர். இத்தொடரில் நால்வரும் சேர்ந்து 21 விக்கெட் வீழ்த்தியுள்ளனர். இவர்களது ‘சுழல்’ ஜாலம் இன்றும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  நியூசிலாந்து அணியை பொருத்தவரை பேட்டிங் ஆர்டரில் வில்லியம்சன், ரச்சின் ரவிந்திராவை ஆகியோர் பார்மில் உள்ளனர். இருவரும், தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான அரையிறுதியில் சதம் விளாசினர். வில் யங், கிளன் பிலிப்ஸ், லதாம், டேரில் மிட்சல் உள்ளனர். லீக் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 5 விக்கெட் சாய்த்த ‘வேகப்புயல்’ மாட் ஹென்றி வலது தோள்பட்டை காயத்தால் விலகி இருப்பது நியூசிலாந்திற்கு பெரிய அடி. கேப்டன் சான்ட்னர், பிரேஸ்வெல், பிலிப்ஸ், ரச்சின் என நான்கு ‘ஸ்பின்னர்’கள் உள்ளனர். இத்தொடரில் மொத்தம் 17 விக்கெட் சாய்த்துள்ளனர். சமீபத்திய டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி, இந்தியாவை 3-0 என வீழ்த்தியது. இதில் இடம் பெற்றிருந்த 8 வீரர்கள் சாம்பியன்ஸ் டிராபியிலும் உள்ளனர். நியூசிலாந்து அணி ‘பீல்டிங்கில்’ அசத்துகிறது. லீக் போட்டியில் கோலி அடித்த பந்தை பறந்து பிடித்த கிளன் பிலிப்ஸ் போன்றோர் பலம் சேர்க்கின்றனர். இத்தொடரில் 31 ‘கேட்ச்சில்’ (4 போட்டி) 3 ஐ மட்டும் நழுவவிட்டது. ‘கேட்ச்’ திறன் 91.1 சதவீதம். இந்தியா 21 ‘கேட்ச்சில்’ (4 போட்டி) 7 வாய்ப்பை ‘மிஸ்’ செய்தது. ‘கேட்ச்’ திறன் 75.0 சதவீதம். எனவே இன்று பீல்டிங்கில் இந்தியா மிக கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம்.. துபாய் சர்வதேச மைதானத்தில் இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். ‘வேகப்புயல்’ ஒருவர் வீசிய பந்து கோலியின் முழங்கால் பகுதியை பதம் பார்த்தது. வலியால் அவதிப்பட்ட இவருக்கு ‘பிசியோதெரபிஸ்ட்’ சிகிச்சை அளித்தார். பின் பேட்டிங் பயிற்சியை நிறுத்திய கோலி, சக வீரர்களின் பயிற்சியை மட்டும் கண்காணித்தார். ‘கோலிக்கு பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. பைனலில் விளையாடுவார்’ என இந்திய பயிற்சி குழுவினர் தெரிவித்தனர். சாம்பியன்ஸ் டிராபி பைனலுக்கு பின்னர் ரோகித் சர்மா 37, கோலி 36, இருவரும் ஓய்வு அறிவிப்பை வெளியிட வாய்ப்பு உள்ளது என வெளியாகியிருக்கும் தகவல்கள் கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!