அப்பள கடையில் பணத்தை திருடிய நபர் கைது
திருச்சி மார்ச் 8- திருச்சி ஆழ்வார் தோப்பு சின்னசாமி நகர் மெயின் ரோடு பகுதியில் ஒரு அப்பளக்கடை உள்ளது. இந்த கடையில் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் பகுதியை சேர்ந்த சதீஷ் (வயது 34) என்பவர் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் சதீஷ் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று காலை கடையை திறக்க வந்த பொழுது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு சதீஷ் அதிர்ச்சி அடைந்தார். பிறகு உள்ளே சென்று பார்த்த போது கல்லாப்பெட்டியில் இருந்த ரூ 30 ஆயிரம் பணம் திருட்டுப் போய் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து சதீஷ் தில்லைநகர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அந்தப் பகுதியில் சந்தேகத்கிடமாக சுற்றித்திரிந்த நபர் ஒருவரை போலீசார் படித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தென்னூர்பகுதியை சேர்ந்தவர் கரிகாலன் (வயது 40 )என்பது தெரியவந்தது. மேலும் இவர் சதீஷ் வேலை செய்யும் அப்பள கடையின் பூட்டை உடைத்து ரூபாய் 30 ஆயிரம் பணத்தை திருடியது தெரியவந்தது இதையடுத்து தில்லை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து கரிகாலனை கைது செய்து அவரிடமிருந்து ரூபாய் 20 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்
டீக்கடை ஊழியரை தாக்கிய வாலிபர் கைது…
திருச்சி மார்ச் 8- திருவரங்கம் ரெயில்வே கேட் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (25. )இவர் திருவரங்கம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள டீக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று திருவரங்கம் ஜான்சி நகரை சேர்ந்த வெங்கடேஷ் (23) என்பவர் குடிபோதையில் டீ கடைக்கு வந்து பெரிய சாமியை தகாத வார்த்தைகளால் திட்டி, தடியால் தாக்கி மிரட்டி சென்று உள்ளார். இதுதொடர்பாக பெரியசாமி திருவரங்கம் போலீசில் புகார் கொடுத்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்துள்ளனர்.
தீபாவளி சீட்டு நடத்தி ரூ பல லட்சம் மோசடி..
திருச்சி கே.கே.நகர், ரெங்கா நகரை சேர்ந்தவர் மீனா பார்வதி மற்றும் அவருடைய மகள் விசாலாட்சி ஆகிய இருவரும் சேர்ந்து தீபாவளி பண்டு, 50ஆயிரம், ஒரு லட்சம், 2, லட்சம் 5 லட்சம் ஏலச்சீட்டுகள் நடத்தி பொது மக்களிடம் பணத்தை பெற்று கொண்டார்.குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி உள்ளனர். பணத்தை ஏமாந்த பொதுமக்கள் இது தொடர்பாக திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்துவிசாரணை நடத்தி வந்தனர் இந்த நிலையில்
மீனாபார்வதி மற்றும் விசாலாட்சி ஆகிய இருவரையும்பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்து மோசடி வழக்கு… திருச்சியில் மேலும் 2 பேர் கைது
திருச்சியில் தனியார் நிறுவனம் தொடங்கி அதில் முதலீடு செய்ய கோரி பொதுமக்கள் பலரை ஏமாற்றி மோசடி செய்த வழக்கில்
சம்மந்தப்பட்டவர்கள் திருச்சியில் உள்ள ஒட்டலில் கூட்டம் நடத்தியதாக திருச்சி பொருளாதார குற்றப்பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமையில் தனிப் படையினர் கூட்டம் நடந்த ஒட்டலுக்கு சென்று விசாரணை செய்தனர். அதில் தனியார் மற்றும் அதன் கிளைநிறுவனங்களை நடத்தி மோசடி செய்து பல வழக்குகளில் தொடர்புடைய ராஜா (எ) அழகர்சாமி,மற்றும் அந்த நிறுவனத்தின் டாப் லீடர்களான செய்யப்பட்ட ராஜப்பா, சாகுல்ஹமீதும், பாபு ஆகியோர்கள் சுமார் 40 நபர்களை சேர்த்து கூட்டம் நடத்தி அதில் பொதுமக்களை முதலீடு செய்ய துண்டியுள்ளார்கள் என தெரியவந்தது. இதையடுத்து பொதுமக்கள் அவர்கள் ஆரம்பிக்கும் நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஏமாற்றப்படுவார்கள் என தனி அறிக்கை கொடுத்தின் பேரில் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவுபோலீசார் சம்பந்தப்பட்ட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். அதில் டாப் லீடர் ராஜப்பாவை ஏற்கனவே கைது செய்து விட்டனர் இந்நிலையில்தலைமறைவாக இருந்த சாகுல்ஹமீது, பாபு ஆகிய 2 பேரையும் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சுகந்தி தலைமையிலான குழுவினர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.