திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த டி.வீரபள்ளி பகுதியைச் சேர்ந்த லிங்க அண்ணன் மகன் சின்னதம்பி முன்னாள் ரயில்வே ஊழியர் இவருடைய மனைவி உயிரிழந்த நிலையில் மூன்று பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். மேலும் மூன்று பிள்ளைகளும் பெங்களூரில் வேலை செய்து வருகின்றனர். இதனால் சின்னதம்பி மட்டும் தற்போது வீட்டில் தனியாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் வீட்டின் அருகே உள்ள குப்பைக்கு தீ வைத்துள்ளார் அப்போது காற்றின் வேகத்தின் காரணமாக சின்னத்தம்பியின் குடிசை
வீடு தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. பின்னர் வீட்டிலிருந்த கேஸ் சிலிண்டர் வெடித்ததில் வீடு முழுவதும் தீ பற்றி தகதகவென எறிய தொடங்கியது. இதில் சின்ன தம்பி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பின்னர் இது குறித்து சின்னதம்பி கொடுத்த தகவலின் பெயரில் நாட்றம்பள்ளி தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர் அதற்குள் வீட்டிலிருந்த வீட்டு சாமான்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமாயின.
மேலும் இந்த சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டின் அருகே இருந்த குப்பைக்கு தீ வைத்த நிலையில் வீடு தீப்பற்றி எரிந்து கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.