Skip to content
Home » குற்றங்களை தடுக்க திருச்சிக்கு வந்த (ஜேம்ஸ்) பாண்ட்……

குற்றங்களை தடுக்க திருச்சிக்கு வந்த (ஜேம்ஸ்) பாண்ட்……

  • by Senthil

திருச்சி மாநகர  போலீஸ் கமிஷனராக .சத்தியப்பிரியா  பதவியேற்றதும், திருச்சியில் போதை பொருள் ஒழிப்பில் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். திருச்சி மாநகரில் போதை பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்வும், போதை பொருள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும்,  திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

திருச்சி மாநகர காவல்துறைக்கு புதியதாக Labrador Retriever என்ற இனத்தை சேர்ந்த ஒரு மோப்ப நாய் வாங்கப்பட்டு அதற்கு BOND என்று பெயரிடப்பட்டது. மேற்படி மோப்ப நாய்க்கு கடந்த 8.8.2022ம் தேதி முதல் 3.2.2023 கோயம்புத்தூர் பயிற்சி மையத்தில் 6 மாதங்கள் பயிற்சி வரை அளிக்கப்படது., இன்று (6.2.2023)ம் தேதி முதல் திருச்சி மாநகர  கமிஷனர் அவர்களின் முன்னிலையில் திருச்சி மாநகர மோப்பநாய் படை பிரிவில் பணிக்கு சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த பாண்ட், குற்றங்களை தடுக்கும் பணியிலும், குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பணியிலும் ஜேம்ஸ் பாண்ட் ஆக பணியாற்றும்  என நம்பலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!