திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நடிகை அமலா பால், தனது குழந்தை மற்றும் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். அப்போது நடிகை அமலா பாலுடன் பொதுமக்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் என அனைவரும் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு கோவில் சார்பில் மாலை அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது.