திமுக வின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அன்பழகனின் 5 ஆம் ஆண்டு நினைவுத் தினத்தை முன்னிட்டு தி.மு.க தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஒன்றிய,பேரூர் அலுவலகத்தில் அவரது உருவப் படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது. இதில் திமுக தஞ்சை வடக்கு மாவட்ட துணைச் செயலர்கள் அய்யா ராசு, துரை முருகன், பாபநாசம் தெற்கு ஒன்றியச் செயலர் நாசர், பாபநாசம் பேரூர் செயலர் கபிலன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் அறிவழகன், பாபநாசம் பேரூர் துணைச் செயலர் சின்ன உதயா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மணிகண்டன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் மணி மாறன், கிளைச் செயலர் விஜய கோபால், கதிரவன் உட்பட பலர் பங்கேற்றனர்.
பேராசிரியர் அன்பழகன் 5ம் ஆண்டு நினைவு நாள் …. பாபநாசத்தில் திமுக சார்பில் மரியாதை…
- by Authour
