தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கை தான் என தமிழக அரசு உறுதியாக கூறி வருகிறது. திமுக, அதிமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் இரு மொழிக்கொள்கையில் உறுதியாக உள்ளன. ஆனால் இந்தியை போதிக்க வேண்டும் என வலியுறுத்தி பாஜக கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறது.
இதில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. விஜயகுமார் என்பவரும், இந்திக்கு ஆதரவாக கையெழுத்திட்டுள்ளார். இவர் திருவள்ளூர் வடக்கு மாவட்டம் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளராகவும் உள்ளார்.
கட்சியின் கொள்கை முடிவுக்கு எதிராக இவர் இந்தியை ஆதரித்து கையெழுத்திட்டதால் இவரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.