Skip to content

குடியிருப்பு பட்டா வழங்கக்கோரி.. மா.கம்யூ., கட்சியினர் சாலை மறியல்..

மயிலாடுதுறை மல்லியம் மஞ்சவாய்க்கால் தெருவில் வசித்துவரும் 100க்கும் மேற்பட்டோருக்கு பல ஆண்டுகளாகப் பட்டா கோரியும் இதுநாள்வரை வழங்கவில்லை என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்.கம்யூ கட்சியினர் மயிலாடுதுறை கும்பகோணம் சாலை மல்லியம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிளைசெயலாளர் செந்தில்குமார் தலைமையில நடைபெற்ற போராட்டத்தில் வாக்குறுதி அளித்தபடி மஞ்சவாய்க்கால் தெருவில் சாலை அமைத்துத்தரவேண்டும், பகுதிநேர அங்காடி வேண்டும் கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திட்டத்தை செயல்படுத்தவேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர், காவல்துறை மற்றும் குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலர் நடத்திய பேச்சுவார்த்தையில் 6 மாத காலத்தில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற உறுதிமொழி அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது, இந்த போராட்டத்தால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

error: Content is protected !!