Skip to content

திருப்பத்தூர் அருகே மின்கசிவால் 3 வீடுகள் எரிந்து நாசம்.. பரபரப்பு….

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த திருப்பத்தூர் to பர்கூர் செல்லும் சாலையில் உள்ள கெஜநாயக்கன்பட்டியில் திடீரென மின்கசிவு காரணமாக நூர்ஜகான், , ஜான்பாஷா, சூர்யா பேகம், இவர்களுக்கு சொந்தமான இரண்டு குடிசைவீடு, ஒரு சீட்வீடு என மூன்று வீடுகள் திடீரென தீப்பற்றி எரிந்தது.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் வர காலதாமதம் ஆனதால் அருகே இருந்த கைபைபில் தண்ணீர் அடித்து குடத்தில் எடுத்து சென்று பொதுமக்கள் தீயை அணைக்க முற்பட்டனர். அதன்பின் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது தண்ணீர் பீச்சு அடிக்க முயற்சி செய்தபோது மோட்டார் வேலை

செய்யாததால் தீயணைப்பு துறையினர் தண்ணீர் பீச்சு அடிக்க முடியாமல் அவதிப்பட்டனர். அதற்குள் தீ மளமளவென பரவி முழுவதுமாக வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. மேலும் வீட்டில் இருந்து இரண்டு காலி சிலிண்டர்கள் அப்புறப்படுத்தப்பட்டது. மேலும் மின் கசிவு காரணமாக மூன்று வீடுகள் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!