Skip to content

தொகுதி சீரமைப்பு: அனுமானங்களுக்கு கருத்து சொல்ல முடியாது- சந்திரபாபு நாயுடு பேட்டி

மத்திய  பாஜக அரசு தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு மெஜாரிட்டி  இல்லாததால்,  தெலுங்கு தேசம் கட்சி ஆதரவுடன்   ஆட்சி அமைத்து உள்ளது.  பாஜக கூட்டணியில் இருப்பதால்,    தெலுங்கு தேசம் ஆட்சி செய்யும் ஆந்திர மாநிலத்துக்கு மத்திய அரசு நிதி  தாராளமாக வழங்கி வருகிறது.

இந்த நிலையில்  மக்களவை  தொகுதி  மறு சீரமைப்பால்  தென் மாநிலங்களுக்கு  தொகுதிகள் குறையும் என்று கூறப்படுகிறதே என  பத்திரிகையாளர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த சந்திரபாபு நாயுடு,   “மக்களவை தொகுதி சீரமைப்பு தொடர்பாகவோ, அதனை எப்படி கணக்கிடுவது என்பது தொடர்பாகவோ  எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. எனவே அனுமானங்கள் குறித்து கருத்து சொல்ல முடியாது’ என்றார்.

error: Content is protected !!