இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 26ல் உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் நகரில் தமிழகத்தைச் சேர்ந்த சிங்காரவேலர் தலைமையில் முதன்முதலாக துவங்கப்பட்டு பல தியாக வரலாறுகளுடன் 100வது ஆண்டை கடந்து நூற்றாண்டு விழா நாடு முழுக்க கொண்டாடப்பட்டு வருகிறது. அதனையொட்டி கட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் ஒன்றிய பேரவைக் கூட்டம் திருமானூரில் சாமி திருமண மண்டபத்தில் ஒன்றிய செயலாளர் மு. கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் ஒன்றிய செயலாளர் G, ஆறுமுகம் வரவேற்புரை வழங்கினார். ஒன்றிய துணைச் செயலாளர்கள் G. மருதமுத்து, K. கரும்பாயிரம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் சொ,ராமநாதன். முன்னாள் மாவட்ட துணைச் செயலாளரும், ஏ ஐ டி யு சி மாவட்ட பொதுச் செயலாளருமான T. தண்டபாணி,
மாவட்டத் துணைச் செயலாளர் ப,கலியபெருமாள், அரியலூர் ஒன்றிய செயலாளர் து. பாண்டியன் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். மாநில நிர்வாகக் குழு உறுப்பினரும் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளருமான வழக்கறிஞர் மு.அ.பாரதி சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது, கட்சி துவங்கிய காலத்தில் இருந்து பல தடைகள், எண்ணற்ற சவால்களை தாங்கி கடந்து தொடர்ந்து நிலைத்து நின்று உழைப்பாளி மக்களுக்காக தனது பணிகளை செய்து வருகிறது. நடப்பாண்டுகள் மாநாடுகள் ஆண்டாகும். எனவே திருமானூர் ஒன்றியத்தில் கட்சி வழிகாட்டுதல் படி கிளை மாநாடுகள், ஒன்றிய மாநாடு திட்டமிட்டு சிறப்பாக நடத்தி முடிக்கும் வகையில் செயல்பட வேண்டுமென்று குறிப்பிட்டு பேசினார்.
பேரவை கூட்டம் முடிந்தவுடன், ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. அதில் கிளை வாரியாக மாநாடுகள் நடத்திட தேதி முடிவு செய்யப்பட்டது. கிளை மாநாடுகள் முடிந்து ஒன்றிய மாநாடு ஏப்ரல் 22ஆம் தேதி சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது, பேரவைக் கூட்டத்தில் வெ. பன்னீர்செல்வம், வேலுசாமி, பஞ்சநாதன், பாலா, திருஞானம், பரிசுத்தம், கல்யாணசுந்தரம் , மதியழகன், சுப்பிரமணியன், சாமிநாதன், ஜீவா, சமுத்திரம், சீரங்கன் , சிதம்பரம், மந்திரவேல்,ரா. சின்னதுரை மற்றும் பெண்கள் உட்பட திரளாக கலந்து கொண்டனர்.