SDPI கட்சியின் தேசிய தலைவர் ஃபைஸி கைது செய்யப்பட்டதை கண்டித்தும், உடனே அவரை விடுதலை செய்ய வலியுறுத்தி திருச்சி பாலக்கரை ரவுண்டானவில் SDPI கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்ட ம் நடந்தது.
மாவட்ட பொதுச் செயலாளர் முகமது சித்திக் வரவேற்றார். மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மண்டல செயலாளர் நியமத்துல்லா மற்றும் தெற்கு மாவட்ட துணைத் தலைவர்கள் ரஹீம், தளபதி. அப்பாஸ் தெற்கு மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் முபாரக் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சியின் தமிழ் மாநில செயலாளர் இமாம் ஹஸ்ஸான் பைஜி கலந்து
கொண்டு தேசிய தலைவரை விடுதலை செய்யக்கோரி உரையாற்றினார். மேலும் திருச்சி ஜாகீரும் பேசினார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிராஜ் ஒன்றிய பிஜேபி அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்.
இந்த கண்டன ஆர்பாட்டத்தில் SDTU தொழிற்சங்க மாநில செயலாளர். முகம்மது ரபீக்,வடக்கு மாவட்ட தலைவர் ஜவகர் அலி, வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் அலாவுதீன், தெற்கு மாவட்ட செயலாளர்கள் மதர். ஜமால் முகம்மது சதாம் உசேன்,மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர் அப்துல் காதர் (பாபு) கிழக்கு தொகுதி தலைவர் சபியுல்லா, மேற்கு தொகுதி தலைவர் சையது முஸ்தபா., திருவெறும்பூர் தொகுதி தலைவர் ஷேக் முகம்மது, ஶ்ரீரங்கம் தொகுதி தலைவர் முகமது யாசிர்,மணப்பாறை தொகுதி செயலாளர் ஜின்னா ,வர்த்தகர் அணி மாநில செயற்குழு உறுப்பினர் சாதிக் பாஷா, SDTU தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சக்கரை மீரான், உள்ளிட்ட நிர்வாகிகள் , பொதுமக்களும் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் மஜித் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மாவட்ட பொருளாளர் பிச்சைக் கனி நன்றி கூறினார்