Skip to content

அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 10 மாணவ-மாணவிகள் வாந்தி…. மருத்துவமனையில் அனுமதி

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த நடுநிலைப் பள்ளியில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 70-க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இன்று மதியம் அப்பள்ளியில் மதிய உணவாக தக்காளி சாதம் பரிமாறப்பட்டது. இதில் சாப்பிட்ட 63 மாணவ, மாணவிகளில் கடைசியாக இருந்த தக்காளி சாதத்தினை சாப்பிட்ட 10 மாணவ, மாணவிகள் வாந்தி எடுத்துள்ளனர்.

வாந்தி எடுத்த பத்து மாணவ, மாணவிகளும் அருகில் இருந்த கோவக்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து மாணவ மாணவிகளின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்காமல் இருந்ததாகவும் அருகில் இருந்தவர்கள் கூறியதன் பேரில் பெற்றோர்கள் பள்ளிக்குச் சென்றபோது பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகள் கோவை குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறிய எடுத்து அங்கு வந்தனர்.

மேலும் மருத்துவமனையில் மாணவ மாணவிகள் அனுமதிக்கப்பட்ட போதிலும் பெற்றோர்களும் தெரிவிக்காமல் இருந்தால் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேசியவர்கள் பள்ளி தலைமை ஆசிரியரின் கணவர் கரூரில் பணிபுரிந்து வருகிறார் அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு எங்களுக்கு முன்னே இங்கு வந்துள்ளார் ஆனால் அருகில் இருக்கும் பாதிக்கப்பட்ட மாணவ மாணவியரின் பெற்றோர்களாக எங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை. மேலும் பள்ளியில் மாணவ மாணவிகளின் கல்வி திறன் மிகவும் மோசமான நிலையில், ஆசிரியர்கள் பலரும் கடமைக்காக பணியாற்றி வருவதாகவும் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் மதிய உணவிற்காக அருகில் உள்ள வீட்டிற்கு சென்று வந்த நிலையில் இன்று கிருஷ்ணராயபுரம் யூனியன் அலுவலகத்தில் அதிகாரிகள் ஆய்வுக்கு வருவதாக கூறி அனைவரையும் கட்டாயப்படுத்தி சாப்பிட வைத்ததாகவும் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் பள்ளியில் சமைக்கும் உணவுகள் பாதி வெந்தும், பாதி வேகாத நிலையில் உள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.மேலும் இது குறித்து தகவலறிந்த கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் மகேந்திரன் மற்றும் குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் ஆகியோர் கோவக்குளம் அரசு மருத்துவமனையில் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!