தமிழ்நாடு வனத்துறையில் உயரிய பொறுப்பில் இருந்த அதிகாரியிடம் கோடிக்கணக்கில் சைபர் கிரைம் மோசடி நடத்தப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற முதன்மை தலைமை வனப் பாதுகாவலரிடம் சுமார் ரூ.6.80 கோடி சைபர் கிரைம் மோசடி என புகார் எழுந்துள்ளது. ஓய்வுக்குப் பின் கிடைத்த பணப் பலன்களை ஒரே மாதத்தில் 2 போலி டிரேடிங் செயலியில் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்தார். குறைந்தபட்சம் ரூ.20 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.70 லட்சம் வரை 20க்கும் மேலான பரிவர்த்தனையில் பணத்தை இழந்துள்ளார். ஒரே மாதத்தில் 2 ஆன்லைன் டிரேடிங் செயலிலும் அதிகம் லாபம் கிடைப்பதாக ரூ.6.80 கோடி இழந்துள்ளார். ஓய்வுபெற்ற வனத்துறை அலுவலரிடம் ரூ.6.80 கோடி மோசடி செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஓய்வு தலைமை வனப்பாதுகாவலரிடம் ரூ. 6.80 கோடி நூதன மோசடி…
- by Authour
