Skip to content

துர்நாற்றம் எடுத்த ஐஸ் கேக்… பிரபல பேக்கரியில் அதிர்ச்சி….

  • by Authour

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் பிரபல பேக்கரி கடையான தாஜ் கேண்டீனில் தனது குழந்தைக்கு ஆசையாக ஐஸ் கேக் வாங்கி சென்ற தந்தை, வீட்டிற்கு சென்று பார்த்த போது துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்து நுகர்ந்து பார்த்தபோது கேக் கெட்டுப் போயிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆற்காடு அமீன் பீரான் தர்கா தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார்(44). சொந்தமாக இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடை வைத்து நடத்தி வருகிறார். இன்று மாலை 5 மணி அளவில் தனது குழந்தை கேக் கேட்டதால் ஆற்காடு பேருந்து நிலையம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல பேக்கரியான தாஜ் கேண்டீனில் ஐஸ் கேக் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு குழந்தைக்கு பிரித்துக் கொடுத்த போது துர்நாற்றம் வீசியதால் சந்தேகத்தின் பேரில் ஐஸ் கேக்கை நுகர்ந்து பார்த்துள்ளார். அப்போது ஐஸ் கேக் கேட்டு கெட்டு போய் அதிலிருந்து துர்நாற்றம் வீசியது தெரியவந்தது. உடனடியாக குழந்தையிடம் இருந்து அதனை அப்புறப்படுத்திய ராஜ்குமார், தாஜ் கேண்டினில் வாங்கிய ஐஸ் கேக் தொடர்பாக அதன் ரசீதுடன் ஆற்காடு நகராட்சியில் உள்ள உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ரவிச்சந்திரனிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை குழுவினர் ஆற்காடு பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் தாஜ் கேன்டீனில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது தாஜ் கேண்டினில் பேக்கரி உணவுப் பொருட்கள் தயாரிக்கும் மூலப் பொருட்கள் காலாவதியாகி இருந்தது தெரிய வந்துள்ளது. உணவுப் பொருட்கள் தயாரிக்கும் இடம் அசுத்தமாக இருந்ததால் கேண்டீன் ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்தினரை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரித்ததோடு காலாவதியான உணவு மூலப் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் சுகாதாரமற்ற கெட்டுப்போன ஐஸ் கேக் விற்பனை செய்த கடையை பூட்டி சீல் வைத்தனர். இந்த சம்பவம் ஆற்காடு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!