புதுக்கோட்டை பெரியார்நகரில் உள்ள மாநிலங்களவை உறுப்பினர் எம். எம்.அப்துல்லா அலுவலகத்தில் நலவாரிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
எம் எம்.அப்துல்லா எம்.பி, அமைப்புசாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் அட்டைகளை 50பேருக்கும், 21 பேர்களுக்கு
அயலகத்தமிழர் நலவாரிய உறுப்பினர் அட்டைகளையும்,
30 பேர்களுக்கு தமிழ்நாடு
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகளையும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் 39வதுவட்ட மாநகராட்சி கவுன்சிலர் பெ. ராஜேஸ்வரி, அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் தெய்வானை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.