தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அருகே கோவிந்த நாட்டுச் சேரி ஊராட்சிக்கு உட்பட்ட நாயக்கர் பேட்டை, பட்டுகுடி கிராமங்களில் ஆதார் சிறப்பு முகாம் நடந்தது. முகாமில் ஆதாரில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், பிழை திருத்தம், விரல் ரேகை புதுப்பித்தல், மொபைல் எண் இணைத்தல் உள்ளிட்டவை நடந்தன. தஞ்சாவூர் முது நிலை அஞ்சலக கண் காணிப்பாளர் தங்கமணி, பாபநாசம் உப கோட்ட அஞ்சல் ஆய்வாளர் வினோத் கண்ணன் அனுமதித்ததன் பேரில், 200 பேரிடம் சரவணன் ஆதார் பதிவை மேற்க் கொண்டார். இதில் ஊராட்சித் தலைவர் ஜெய் சங்கர், வார்டு உறுப்பினர்கள் கணேசன், பரமேஸ்வரி, மணியம்மை, துரை, கலை வாணி உட்பட பங்கேற்றனர். பட விளக்கம்: நாயக்கர் பேட்டையில் ஆதார் சிறப்பு முகாம் நடந்தது
தஞ்சை அய்யம்பேட்டை அருகே ஆதார் சிறப்பு முகாம்…
- by Authour
