ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் பழனி முருகன் கடந்த 3ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். இன்று அவர் வேட்புமனுவை வாபஸ் பெற்றார். இது குறித்து கருத்து தெரிவித்த எடப்பாடி அணி தேர்தல் பணிக்குழு தலைவர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நம்முடைய அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் வேட்பாளரை வாபஸ் பெற்றுள்ளார். அவருக்கு நன்றி என்று கூறினார்.
ஓ.பி.எஸ். ஆதரவாளர் வாபஸ் பெற்ற நிலையிலும்., ஓபிஎஸ் அணியினர் ஈரோடு கிழக்குத் தொகுதியில் இரட்டைக்கு தேர்தல் பிரசாரம் செய்வோம் என்றனர். இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக பழனிமுருகன் வாபஸ் பெற்று உள்ளார் என்றும் ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் தெரிவித்தார்.