நடிகர் அஜித்குமாரின் அஜித் குமார் ரேசிங் சார்பாக பல்வேறு நாடுகளில் நடைபெற்று வரும் கார் பந்தயத்திற்காக நடிகர் அஜித்குமார் மற்றும் அவரது குழுவினர் பங்கேற்று வரும் நிலையில், பார்சிலோனாவில் நடைபெற்ற கார் பந்தயத்தில் தனது பழைய ரெக்கார்டை நடிகர் அஜித்குமார் பிரேக் செய்துள்ளதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தரப்பிலிருந்து வீடியோ பகிரப்பட்டுள்ளது.
இதற்கு முன்பாக 1.51 நிமிடங்களில் ஒரு சுற்றை முடித்திருந்ததே நடிகர் அஜித்குமாரின் பழைய சாதனையாக இருந்தது இந்நிலையில் 1.47 நிமிடங்களில் ஒரு லேப்பை முடித்து இருப்பது அவருடைய புதிய சாதனையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கைதேர்ந்த கார் பந்தயக்காரர்களின் ரெக்கார்டிற்கும் அஜித்குமாரின் ரெக்கார்டிற்கும் 4 நொடிகள் மட்டுமே வித்தியாசம் இருப்பதாக அவர்கள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த லேப்பில் அஜித் 270 கிலோ மீட்டர் வேகத்தில் காரை இயக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.