கோவை, ராம் நகர் பகுதியில் அமைந்து உள்ளது. செந்தில் குமரன் திரையரங்கம், அங்கு இரவு காட்சி சென்று உள்ளனர் கால் டாக்ஸியில் வந்த வாடிக்கையாளர். இந்த நிலையில் அந்த ரெட் கால் டாக்ஸி ஓட்டி வந்த ஓட்டுநர் படம் முடிவதற்கு மூன்று மணி நேரம் ஆகும் நிலையில், மது அருந்தி விட்டு தூங்கிய பிறகு செல்லலாம் என்று அந்த கால் டாக்ஸியில் ஓட்டுநர் இருக்கையில் படுத்து உறங்கி உள்ளார்.
இதைத் தொடர்ந்து அவர் மது போதையில் தூக்க கலக்கத்தில் கால் டாக்ஸியின் கதவு திறந்து நிலை தடுமாறி சாலையில் விழுந்து உள்ளார். மது போதையில் இருந்ததால், என்ன நடக்கிறது என்று தெரியாமல், அவர் அப்படியே சாலையில் படுத்து உறங்கி கொண்டு இருந்து உள்ளார். இதனைக் கண்ட அப்பகுதியில் சென்ற ஒரு நபர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து அந்த காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்து உள்ளார்.
அதில் தற்பொழுது செந்தில், குமரன் திரையரங்கில் இரவு காட்சி முடிந்து விட்டது. இதைத் தொடர்ந்து ரெட் கால் டாக்ஸி ஓட்டுனரின் திரைப்படம் தற்பொழுது ஓடி கொண்டு உள்ளதாக பதிவு செய்து உள்ளார். இந்த காட்சிகள் தற்பொழுது வைரலாகி வருகிறது.