Skip to content

காருக்குள் சடலமாக கிடந்த டிராவல்ஸ் அதிபர்… திருச்சி க்ரைம்

காருக்குள் சடலமாக கிடந்த டிராவல்ஸ் அதிபர்…

திருச்சி, மாவட்டம் லால்குடி ஆங்கரை மலையப்பபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் பிரவீன் குமார் (வயது 31 )இவர் டிராவல்ஸ் நடத்தி வந்தார்.இவர் நேற்று வேலை விஷயமாக திருச்சி அரியமங்கலம் வந்தார். அரியமங்கலம் லட்சுமிபுரம் பஸ் ஸ்டாப் அருகில் காரை நிறுத்தி இருந்தார்.பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.அங்கு அந்த கார் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அறியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் எழில் நிலவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரை சோதித்தனர். காருக்குள் பிரவீன் குமார் மூக்கு, காதில் ரத்தம் வந்த நிலையில் பிணமாக கிடந்தார் .உடனே அவரை மீட்டு போலீசார் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது தாய் காளியம்மாள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அரியமங்கலம் போலீசார் விசாரணை  செய்து வருகின்றனர் .இது கொலையா? தற்கொலையா? அல்லது இயற்கை மரணமா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

நடுரோட்டில் சடலமாக கிடந்த முதியவர்.. 

திருச்சி திருவானைக்காவல் மெயின் ரோட்டில் ஒரு ஹோட்டல் அருகே சென்ற மீடியனில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். இது குறித்து வெள்ளி திருமுத்தம் கிராம நிர்வாக அதிகாரி ஹரிஹரன் திருவரங்கம் போலீசுக்கு தகவல் அளித்தார் .தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சட்டநாதன் மற்றும் போலீசார் அந்த முதியவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். உடல் திருவரங்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருவரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் யார் ?எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!