திருச்சி தென்னூர் கண்ணதாசன் சாலை அண்டகொண்டான் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் முகமது யூசுப். இவரது மகன் அய்யூப் (31). இவருக்கும்,அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதனால் அதே பகுதியைச் சேர்ந்த தென்னூர் அண்ணா நகர் புது மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கருப்பு என்கிற ஹமீது என்பவருக்கும், அய்யூப்புக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று அயூப்பின் வீட்டிற்குச் சென்ற கருப்பு என்கிற ஹமீது, மாஞ்சா வேலு என்கிற ராஜதுரை, ஜெயராம் ஆகிய 3 பேரும் யூசூப்பை அரிவாளால் வெட்டினர். இதில் காயமடைந்த யூசூப் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார் .இது குறித்து யூசூப் அளித்த புகாரின் பேரில் கருப்பு என்கிற ஹமீது, மாஞ்சா வேலு ஆகிய 2 ரவுடிகளையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் ரவுடி பட்டியலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தலைமறைவான ஜெயராமை தில்லை நகர் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வாலிபருக்கு அரிவாள் வெட்டு…. 2 ரவுடிகள்-ஒருவர் எஸ்கேப்.. திருச்சியில் சம்பவம்…
- by Authour
